கலாவாணி சன சமூக நிலையத்தின் கீதம்...

கலாவாணியே நீ வாழி!.....

கம்பர்மலை சன சமூக நிலையம்

வாழிய வாழியவே! - எங்கள்

முந்தையர் தம்முயிர் போலவளர்த்த

மூலாதாரம் வாழியவே!                                - கம்பர்மலை


கல்வி சிறந்திட கருணை மலிந்திட

பல்வித கலைகள் பரந்து செறிந்திட

நல்வித அறிவியல் ஞானம் வளர்ந்திட

கொல் மத இனமொழிபேதம் அடங்கிட   - கம்பர்மலை


ஒற்றுமை ஓங்கி உறவு மிளிர்ந்திட

சற்குண சீலம் தழைத்துப் பொலிந்திட

பற்பல நற்பணி பரந்து வளர்ந்துயர்

வித்தகராய் எமை மேதினி வாழ்த்திட        - கம்பர்மலை


எம்மை இங்கீன்று இனிது வளர்த்த நம்

அன்னையர் தந்தையர் சின்னஞ் சிறுவராய்

மண்ணை அணைந்து மதலைகள் பேசிய

புண்ணிய பூமியில் தண்ணொளி வீசிடும் - கம்பர்மலை


நமது மூதாதையர் நயமுறக் காட்டிய

நெஞ்சத் துணிவுடன் நேசிய வீரமும்

பயனுறும் ஐக்கிய பணிகளும் தொண்டும்

வியனுல கெங்கணும் மேவிச் சிறந்திட       - கம்பர்மலை


ஆக்கம்

   ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.கே.தங்கவடிவேல் 

Make a Free Website with Yola.