வருடாந்த பரிசளிப்பு விழா - கலாவாணி சன சமூக நிலையம்


கலாவாணி சன சமூக நிலையத்தின் இவ்வருடத்திற்கான வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 26.05.2013 அன்று நிலையத்தின் தலைவர் திரு ச.குணரத்தினம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு தண்டபாணிகதேசிகர்(சிவஸ்ரீ சோமஸ்கந்த தண்டபாணிகதேசிகர் J.P இந்துமத குருபீடாதிபதி,அகில உலக சைவக்குருமார் சம்மேளனம், பிரதமகுரு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸதானம், வல்வெட்டித்துறை)     கலந்து சிறப்பித்தார்.     முதலில் மாணவர்கள் அருகிலுள்ள அம்மன் ஆலயத்தில் வழிபட்டு அணிவகுத்து மேடைக்கு அழைத்துவரப்பட்டனர்.

பின்னர் பலரது சிறப்புரைகளைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பதக்கங்ளை பிரதம விருந்தினர் அணிவித்தார்.

அனைத்து மாணவர்களுக்கும் திரு சௌந்தரராஜன் ஜெசிந்தன்(கனடா) அவர்கள் பணப்பரிசில்களை தனித்தனியே வழங்கினார்.இவர் மொத்தமாக 230,000ரூபா பணத்தொகையினை அன்பளிப்புச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பதின்நான்கு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்ப்பட்டன. இவற்றினை பலரும் முன்வந்து வழங்கியிருந்தனர்.

மேலும் பலர் அன்பளிப்புக்களைச் செய்திருந்தனர். அவர்களது விபரங்கள் கணக்கறிக்கையுடன் வெளியிடப்படும்.துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்புச் செய்தோர் விபரம்

1.திரு வடிவேல் வசந்தகுமார் (கனடா)

2.திருமதி பாக்கியம் கதிரவேல் (இலங்கை)

3.திரு கிருஸ்ணன் சிறீதரன் (சுவிஸ்)

4.திரு குணரட்ணம் சுரேஸ (கனடா)

5.அன்று ராஜசூரியர் (திருச்சபை)

6.ஆனந்தராஜா அகிலன் (ஐக்கிய இராட்சியம்)

7.கதிரவேற்பிள்ளை சசி (ஐக்கிய இராட்சியம்)

8.திரு வேலுப்பிள்ளை இரவீந்திரன் (கனடா)

9.திரு வேலுப்பிள்ளை சுஜேந்திரராஜா (கனடா)

10.தங்கவேல் மணிவண்ணன், ஜெகன் (இலங்கை)

11.தம்பிராஜா சிறீஸ்காந்தராஜா(கனடா)

12.ஆறன் இராசேந்திரம் (இலங்கை)

13.சதாசிவம் புவீந்திரராஜா(கனடா)

14.சௌந்தரராஜன் ஜெசிந்தன் (கனடா)

மேலும் படங்களைப் பார்க்க....

Make a Free Website with Yola.