ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு K.தங்கவடிவேல் அவர்களின் சேவை நலன்  பாராட்டு விழா

ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு K.தங்கவடிவேல் அவர்களின் சேவை நலன்  பாராட்டு விழா 15.12.2012 அன்று மாலை 5.00 மணிக்கு

கலாவாணி சனசமூக நிலைய முன்றலில் கலாவாணி சனசமூக நிலையத்தின் தலைவர்

திரு ச.குணரத்தினம் தலைமையில் ஆரம்பமானது. இவ்விழாவினை கலாவாணி சனசமூக நிலையம்,

பொன்.கந்தையா சனசமூக நிலையம், நீதி தேவி சனசமூக நிலையம், ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம்,

யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம், கலாவாணி முன்பள்ளி, மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் என்பன

இணைந்து நடாத்தியிருந்தன. 


இந்நிகழ்ச்சியினை திரு வே.பாஸ்கரன் (முகாமையாளர், செலிங்கோ, திடீர் மரண விசாரணை அதிகாரி, சமாதான நீதவான்)

அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார். வரவேற்புரையினை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக பொருளாளர் 

திரு அ.கிருபாகரன் நிகழ்த்தினார். தொடர்ந்து விழா  நாயகனின் சேவைகளையும், சமூகப்பணிகளினளயும்

வல்வைட்டித்துறை நகரபிதா திரு ந.அனந்தராஜ் அவர்கள் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து

திரு K.தங்கவடிவேல் அவர்களுடன் பணிபுரிந்த, கல்விகற்ற பலர் அவர் குறித்த திறமைகளையும்,

சேவைகளையும் மீள நினைவுபடுத்தினர். குறிப்பாக அவர் சிறந்த ஒரு கரப்பந்தாட்ட வீரராகவும், ஓவியராகவும்,

எழுத்தாளராகவும் திகழ்ந்ததை பலரும் நினைவுபடுத்தினர்.


பின்னர் திரு K.தங்கவடிவேல் அவர்களுக்கு நினைவுப்பரிசில்கள் வழங்கப்பட்டன. பின்னர் இந்நிகழ்ச்சியினை சிறப்பித்துக் கலந்து கொண்ட பிரபல எழுத்தாளரும்,

ஓய்வுபெற்ற ஆசிரியருமான திரு K.நடேசன் (தெணியான்) அவர்கள் விழா நாயகனின் ஆசிரிய சேவையினையும்,

சமூகம் சார்ந்த போராட்ங்களையும் நினைவுபடுத்தி சிறப்புரையொன்றினை ஆற்றியிருந்தார்.



இறுதியில் திரு K.தங்கவடிவேல் அவர்கள் உரையாற்றும்போது கலாவாணி சனசமூக நிலையம் மற்றும்

யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் என்பனவற்றுக்கான பெயர்கள் சூட்டப்பட்ட விதங்களினை கூறினார்.

கலைவாணி ச.ச நிலையம் என்ற பெயரில் ஏற்கனவே தொண்டைமானாற்றில் ச.ச நிலையம்

இருந்த காரணத்தினால் கலாவாணி என பெயர் சூட்டபட்டதெனவும் மேலும் விளையாட்டுக்கழகத்திற்கு

”இளங்கம்பன்ஸ்” என கூறிய போதும் பலருக்கு இப்பெயர் திருப்தியளிக்காததால் ”யங்கம்பன்ஸ்”(Young Kampans)

என மாற்றப்பட்டது எனவும் கூறினார்.. இறுதியாக பொன்.கந்தையா சனசமூக நிலையத்தின் சார்பில்

திரு பிரதீபன் நன்றியுரையினை வழங்கினார்.

மேலும் படங்களை பார்க்க....

Make a free website with Yola